Post

Share this post

ரஷ்யாவுக்கு ஆயுத விநியோகம்?

உக்ரைன் போரில் பயன்படுத்துவதற்காக ரஷ்யாவுக்கு தாங்கள் ஆயுதங்களை அனுப்பி வருவதாக அமெரிக்கா தெரிவிக்கும் குற்றச்சாட்டை வட கொரியா திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இது குறித்து அந்த நாட்டின் தேசிய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் வெளிவிவகாரப் பிரிவு துணை இயக்குநா் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ரஷ்யாவுக்கும் வட கொரியாவுக்கும் இடையிலான ஆயுத பேரம் குறித்து அமெரிக்கா அண்மையில் சில தகவல்களை வெளியிட்டது. இது, முகாந்திரமற்ற வதந்தியாகும்.
ஆயுத வா்த்தகம் தொடா்பாக எங்களுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே எந்த ஒப்பந்தமும் இல்லை; அத்தகைய ஒப்பந்தம் இனியும் மேற்கொள்ளப்படாது என்பதை மீண்டும் தெளிவுபடுத்துகிறோம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஆப்பிரிக்காவுக்கு பொருள்களை அனுப்புவது போல் ரஷ்யாவுக்கு எறிகணைகளை வட கொரியா அனுப்பி வருவதாக அமெரிக்கா கூறியது.

Leave a comment