Post

Share this post

சம்பளத்தை ராக்கெட் வேகத்தில் உயர்த்திய நபர்!

இசையமைப்பாளர் அனிருத் தன் சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழில் 3 திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். அதன்பின், தொடர்ந்து ‘எதிர்நீச்சல்’ ‘வணக்கம் சென்னை’ உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமடைந்தார்.
தற்போது, தமிழின் முன்னணி இசையமைப்பாளராக இருக்கிறார். சமீபத்தில் வெளியான ’பீஸ்ட்’, ‘விக்ரம்’, ‘டான்’, ‘திருச்சிற்றம்பலம்’ உள்ளிட்ட படங்களில் அட்டகாசமான பாடல்களையும் பின்னணி இசையையும் வழங்கியிருந்தார்.
மேலும், ஷாருக்கான நடிப்பில் உருவாகி வரும் பான் இந்திய திரைப்படமான ‘ஜவான்’ படத்திற்கும் இசையமைக்க உள்ளார்.
இந்நிலையில், அனைத்து முன்னணி கதாநாயகர்களின் முதல் தேர்வாக அனிருத் இருப்பதால் அவர் தன் சம்பளத்தை பெரிய படங்களுக்கு ரூ.10 கோடியாக உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a comment