Post

Share this post

நடிகை வாங்கிய வீடு இத்தனை கோடியா..?

பிரபல தயாரிப்பாளரான போனிகபூரின் மகள் ஜான்வி கபூர் ‘தடக்’ திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் நடிகையாக அறிமுகமானார். இவர் தனது நடிப்பால் ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் சிறந்த அறிமுக கதாநாயகிக்கான விருதையும் பெற்றுள்ளார்.
சமீபத்தில் இவர் நடித்த ‘மிலி’ திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இவர் விரைவில் தென்னிந்திய திரையுலகிலும் என்ட்ரீ கொடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஜான்வி கபூர் மும்பை பாந்த்ரா பகுதியில் ஒரு கட்டிடத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களை விலைக்கு வாங்கியுள்ளார்.
இதன் மதிப்பு ரூ.65 கோடி என்று கூறப்படுகிறது. 8,669 சதுர அடியில் 6421 சதுர அடி கட்டிட பரப்பளவை கொண்ட இந்த தளங்களில் பிரம்மாண்ட நீச்சல் குளம் மற்றும் ஐந்து கார்களை நிறுத்தும் அளவிற்கு பார்க்கிங் வசதியும் உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

Leave a comment