Post

Share this post

கௌரவ டொக்டர் பட்டம் பெறும் இளையராஜா!

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா மூன்று தலைமுறையுடன் இணைந்து இசையமைத்துள்ளார்.
இதுவரை ஆயிரத்திற்கு மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்த இளையராஜா தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களுகளுக்கு இசையமைத்துள்ளார். மேலும், இவர் மாநிலங்களவை எம்.பி.யும் ஆவார்.
இந்நிலையில், இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு நாளை (நவம்பர் 11) கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளது. திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நாளை நடைபெறுகிறது. இதில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். இதற்காக அவர், தனி விமானத்தில் மதுரை வருகிறார்.
இந்த நிகழ்ச்சியில் இளையராஜா மற்றும் உமையாள்புரம் சிவராமன் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி வழங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment