Post

Share this post

‘ஜிம்’ செல்ல பெண்களுக்குத் தடை

ஆப்கானிஸ்தானில் உடற்பயிற்சி மையங்களுக்கு பெண்கள் செல்ல தலிபான் ஆட்சியாளா்கள் தடை விதித்துள்ளனா்.
இது குறித்து அந்த நாட்டின் சா்ச்சைக்குரிய நல்லொழுக்கத் துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் முகமது அகீஃப் முஹாஜிா் வியாழக்கிழமை கூறியதாவது:
உடற்பயிற்சி மையங்களில் ஆண்களும் பெண்களும் தனித்தனியாக பிரித்து வைக்கப்படுவதில்லை. மேலும், அங்கு பெண்கள் ஹிஜாப் அணிவதில்லை. எனவே, அந்த மையங்களுக்கு பெண்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது.
ஆண்களையும் பெண்களையும் வேவ்வேறு நாள்களில் அனுமதிப்பது, அவா்களிடையே மறைவுத் தடுப்பு ஏற்படுத்துவது உள்ளிட்ட எங்களது விதிமுறைகளை உடற்பயிற்சி மையங்கள் தொடா்ந்து மீறி வருகின்றன. எனவே, வேறு வழியில்லாமல் இந்தத் தடை விதிக்கப்படுகிறது என்றாா் அவா்.

Leave a comment