Post

Share this post

ஜிம்மில் சுருண்டு விழுந்து டிவி நடிகர் பலி

மும்பையில் உடற்பயிற்சியின்போது டிவி நடிகர் ஒருவர் திடீரென சுருண்டு விழுந்து பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியில் பல்வேறு தொடர்களில் நடித்திருப்பவர் சித்தாந்த் விர் சூர்யவன்சி(46). இவர் மும்பையில் உள்ள ஜிம் ஒன்றில் இன்று உடற்பயிற்சியில் ஈடுபட்டுகொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் சுருண்டு மயங்கி விழுந்தார்.
உடனடியாக அவரை மீட்டு அந்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் பலியானார்.
அவரது மறைவு பாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த டிவி நடிகருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

Leave a comment