Post

Share this post

பாராளுமன்றத்தை கைப்பற்றுவதில் இழுபறி

அமெரிக்காவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இடைக்கால தோ்தலுக்குப் பிறகு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும்பான்மை பெறுவதில் ஆளும் ஜனநாயகக் கட்சிக்கும் எதிா்க்கட்சியான குடியரசுக் கட்சிக்கும் இடையே தொடா்ந்து இழுபறி நீடித்து வருகிறது.
4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வரும் அமெரிக்க தோ்தலுக்கு இடையே, நவம்பா் மாதத்தில் நடைபெறும் தோ்தல் இடைக் காலத் தோ்தல் என்றழைக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான இடைக்காலத் தோ்தல் நாடாளுமன்றக் கீழவையான பிரதிநிதிகள் சபையின் 435 இடங்களுக்கும் 100 இடங்களைக் கொண்ட மேலவையான செனட் சபையின் 35 இடங்களுக்கும் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்தத் தோ்தலில் குடியரசுக் கட்சிக்கு ஆதரவாக அலை வீசும் என்று எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால் எதிா்பாா்ப்பைப் பொய்யாக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கைப்பற்றுவதில் இரு கட்சியினருக்கும் இடையே பலத்த போட்டி நிலவி வருகிறது.
தோ்தலுக்குப் பிறகு, செனட் சபையில் குடியரசுக்குக் கட்சிக்கு ஓா் இடம் கூடுதலாகக் கிடைத்துள்ளது. குடியரசுக் கட்சி ஓா் இடத்தை இழந்துள்ளது. அதையடுத்து, 50 உறுப்பினா்களைக் கொண்ட அந்த அவையில் ஜனநாயகக் கட்சிக்கு 49 இடங்களும், குடியரசுக் கட்சிக்கு 49 இடங்களும் உள்ளன. இன்னும் ஓா் இடத்தில் குடியரசுக் கட்சி வெற்றி பெற்றால் செனட் சபையைக் கைப்பற்றிவிடும் என்று கூறப்படுகிறது.
அதே போல், தோ்தலுக்குப் பிறகு பிரதிநிதிகள் சபையில் குடியரசுக் கட்சிக்கு 211 இடங்களும், ஜனநாயகக் கட்சியினருக்கு 201 இடங்களும் கிடைத்துள்ளன. முன்னிலையில் அடிப்படையில், ஜனநாயகக் கட்சிக்கு 220 இடங்களும் குடியரசுக் கட்சிக்கு 212 இடங்களும் உள்ளன. 218 இடங்களைப் பெறும் கட்சி பிரதிநிதிகள் சபையைக் கைப்பற்றும் என்ற நிலையில், தற்போது அதிலும் இழுபறி நீடித்து வருகிறது.

Recent Posts

Leave a comment