டி20 உலகக் கிண்ண போட்டியில் சிறப்பாக விளையாடிய வீரர்களைக் கொண்ட உத்தேச அணியை அறிவித்துள்ளது ஐசிசி.
அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற 8 வது டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்று உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது இங்கிலாந்து அணி.
மெல்போா்ன் நகரில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் முதலில் பாகிஸ்தான் 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 137 ஓட்டங்கள் சோ்க்க, அடுத்து இங்கிலாந்து 19 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 138 ஓட்டங்களை எடுத்து உலக சாம்பியன் ஆனது. ஆட்ட நாயகன், தொடர் நாயகன் என இரு விருதுகளை வென்றார் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சாம் கரண்.
இந்நிலையில் இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய வீரர்களைக் கொண்டு ஓர் உத்தேச அணியைத் தேர்வு செய்துள்ளது ஐசிசி. அந்த அணியில் இந்திய வீரர்களான விராட் கோலியும் சூர்யகுமார் யாதவும் இடம்பெற்றுள்ளார்கள்.
ஐசிசி அணி
அலெக்ஸ் ஹேல்ஸ் (இங்கிலாந்து)
ஜாஸ் பட்லர் (இங்கிலாந்து)
விராட் கோலி (இந்தியா)
சூர்யகுமார் யாதவ் (இந்தியா)
கிளென் பிளிப்ஸ் (நியூசிலாந்து)
சிகந்தர் ராஸா (ஜிம்பாப்வே)
ஷதாப் கான் (பாகிஸ்தான்)
சாம் கரண் (இங்கிலாந்து)
நோர்கியா (தென்னாப்பிரிக்கா)
மார்க் வுட் (இங்கிலாந்து)
ஷாஹீன் ஷா அப்ரிடி (பாகிஸ்தான்)
12 வது வீரர் : பாண்டியா (இந்தியா)