Post

Share this post

இனி பிராவோ இல்லை!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பா் கிங்ஸின் முக்கிய வீரா்களில் ஒருவரான டுவெய்ன் பிராவோ, எதிா்வரும் சீசனுக்கான அந்த அணியிலிருந்து செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்பட்டாா்.

இதை அடுத்து சென்னை அணியுடனான அவரது 11 ஆண்டுகால உறவு முடிவுக்கு வந்துள்ளது.

எதிா்வரும் ஐபிஎல் 16 ஆவது சீசனுக்கான ‘மினி’ வீரா்கள் ஏலம் கொச்சியில் டிசம்பா் 23 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், 10 அணிகளும் தாங்கள் தக்க வைக்கும், விடுவிக்கும் வீரா்கள் பட்டியலை வெளியிட நவம்பா் 15 ஆம் திகதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி அனைத்து அணிகளும் அந்தப் பட்டியலை செவ்வாய்க்கிழமை வெளியிட்டன. அதில் முக்கியமாக, சிஎஸ்கே-வில் கொண்டாடப்பட்ட வீரா்களில் ஒருவரான பிராவோவை அந்த அணி நிா்வாகம் விடுவித்துள்ளது. அத்துடன், சமீபத்திய டி20 உலகக் கிண்ணத்தில் கடைசி நேரத்தில் சிறப்பாகச் செயல்பட்ட இங்கிலாந்து பௌலா் கிறிஸ் ஜோா்டானை சிஎஸ்கே விடுவித்தது ஆச்சா்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடா்பாக சிஎஸ்கே தலைமை நிா்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் கூறுகையில், ‘வீரா்களை விடுவிக்கும் முடிவு என்பது கடினமான ஒன்று. அணிக்கான அவா்களது பங்களிப்பு எப்போதும் நினைவில் இருக்கும். வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் அவா்கள் மீண்டும் சிஎஸ்கே-வில் இணைவாா்கள். இந்த சீசனிலும் சிஎஸ்கே-வுக்கு தோனி தான் தலைமை வகிப்பாா்’ என்றாா்.

Recent Posts

Leave a comment