Post

Share this post

7 வருடங்களுக்குப் பிறகு மீண்டும்…

ஏழு வருடங்களுக்குப் பிறகு பாடகர் உதித் நாராயண் இசையமைப்பாளர் டி. இமான் இசையில் ஒரு பாடலை பாடியுள்ளார்.
பல மொழிகளில் பாடல்களைப் பாடி பிரபலமானவர் உதித் நாராயண். இவர் ஜி.வி.பிரகாஷ் இசையில் ‘இது என்ன மாயம்’ படத்தில் கடைசியாக பாடிய பாடல் ‘மச்சி மச்சி’ என்பதாகும். இதற்கடுத்து 7 வருடங்களுக்கு பிறகு தற்போது பாடியுள்ளார்.
பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படம் டீஎஸ்பி. இப்படத்தில் டி. இமான் இசையமைக்கிறார். அனுகீர்த்தி கதாநாயகியாக நடித்துள்ளார். ஷிவானி நாராயணன், குக் வித் கோமாளி ஷோவில் பிரபலமான புகழ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
கார்த்திக் சுப்புராஜ் வழங்கும் இந்தப் படத்திற்கு வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். டிசம்பரில் படம் வெளியாகுமென தகவல் சொல்லப்படுகிறது. ஆனால் தேதி இன்னும் முடிவாகவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தில் செந்தில் கணேஷ் மற்றும் விஜய் முத்துப்பாண்டி எழுதிய பாடலை பிரபல பாடகர் உதித் நாராயண் பாடியுள்ளார். நீண்ட வருடத்திற்குப் பிறகு அவர் பாடியுள்ள பாடல் இது என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Leave a comment