Post

Share this post

இன்னும் 3 நாட்கள்…

குரூப் ஏ
போட்டியை நடத்தும் கத்தார், முதல் முறையாக உலகக் கோப்பை போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளது. ஆசிய சாம்பியனாக போட்டிக்குள் அடியெடுத்து வைக்கும் இந்த அணி, அந்தப் போட்டிகளில் 2019 வரை காலிறுதிக்குக் கூட தகுதிபெற்றதில்லை. தற்போது புதிய பயிற்சியாளரான ஃபெலிக்ஸ் சான்செஸ் வழிகாட்டுதலில் புதிய தலைமுறை வீரர்களைக் கொண்டு இந்த உலகக் கிண்ண போட்டிக்காகவே தயார் செய்யப்பட்டுள்ளது. சொந்த மண்ணில் ஆடும் சாதகத்துடன் போட்டியில் களம் காண்கிறது கத்தார்.
முக்கிய வீரர்கள் : அல்மோஸ் அலி (ஸ்டிரைக்கர்), ஹோமாம் அல் அமின் (லெஃப்ட் பேக்), சாத் அல் ஷீப் (கோல்கீப்பர்), அல்துல் கரீம் ஹசன் (லெஃப்ட் பேக்), ஹசன் அல் ஹேதோஸ் (ஃபார்வர்ட்), அக்ரம் அஃபிஃப் (ஃபார்வர்ட்).
நெதர்லாந்து (உலகத் தரவரிசை – 8)
பயிற்சியாளர் லூயிஸ் வான்கால் வழிகாட்டுதலில், உலகக் கிண்ண அனுபவம் இல்லாத பல இளம் வீரர்களுடன் களத்துக்கு வருகிறது நெதர்லாந்து. ஆனால், தகுதிச்சுற்றில் விளையாடிய 10 ஆட்டங்களில் ஒரேயொரு ஆட்டத்தில் மட்டும் தான் தோற்றிருக்கிறது. இதுவரை 10 முறை உலகக் கிண்ண போட்டிகளில் விளையாடியிருக்கிறது இந்த அணி. அதிகபட்சமாக 3 முறை இறுதி ஆட்டம் வரை (1974, 1978, 2010) வந்துள்ள நெதர்லாந்து, அதிக இறுதி ஆட்டங்களில் களம் கண்டு கிண்ண வெல்லாத அணி என்ற பெயருடன் இருக்கிறது.
முக்கிய வீரர்கள் : ஃப்ராங் டி ஜோங் (மிட்ஃபீல்டர்), கோடி காப்கோ (ஃபார்வர்ட்), விர்ஜில் வான் டிக் (சென்டர் பேக்), டென்ùஸல் டம்ஃப்ரைஸ் (ரைட் – விங்பேக்), மெம்பிஸ் டிபே (ஃபார்வர்ட்).
ஈகுவடார் (உலகத் தரவரிசை – 44)
தென்னமேரிக்க கால்பந்து கூட்டமைப்பிலிருந்து ஆச்சர்யமளிக்கும் வகையில் உலகக் கோப்பை போட்டிக்குத் தகுதிபெற்றிருக்கிறது இந்த அணி. தகுதிச்சுற்றின்போது, பெரு, சிலி, கொலம்பியா, பராகுவே போன்ற பலம் படைத்த அணிகளை வீழ்த்தி அசத்தியிருக்கிறது. பயிற்சியாளர் கஸ்டாவோ அல்ஃபரோவின் உருவேற்றுதலில் திறமை படைத்த இளம் வீரர்களுடன் தகுதிவாய்ந்த அணியாக இருக்கிறது ஈகுவடார். இந்த அணிக்கு இது 4-ஆவது உலகக் கோப்பை போட்டி. அதிகபட்சமாக கடந்த 2006-இல் ரவுண்ட் ஆஃப் 16 வரை வந்துள்ளது.
முக்கிய வீரர்கள் : மொய்சஸ் கெய்சிடோ (மிட்ஃபீல்டர்), கொன்ஸாலோ பிளாடா(விங்கர்), பியரோ ஹின்காபி (டிஃபெண்டர்), பெர்விஸ் எஸ்டுபினான் (டிஃபெண்டர்), எனர் வா லென்சியா (ஃபார் வர்ட்).
செனகல் (உலகத் தரவரிசை – 18)
நடப்பு ஆப்பிரிக்க சாம்பியனாக போட்டிக்கு வந்திருக்கிறது செனகல். பயிற்சியாளர் அலியு சிஸ்úஸ கடந்த 2015 முதல் அணியின் முக்கிய பலமாக இருக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் சாம்பியன்ஸ் லீக் போட்டிக்கான அணிகள் பட்டியலில் ஒரு செனகல் வீரராவது இடம்பெறாமல் போனதில்லை. உலகக் கிண்ண போட்டியில் இதற்குமுன் இரு முறை பங்கேற்ற அந்த அணி, அதிகபட்சமாக 2002 இல் காலிறுதி வரை வந்தது. போட்டி வரலாற்றிலேயே அதிக “மஞ்சள் அட்டை´ பெற்றதன் அடிப்படையில் வெளியேற்றப்பட்டிருக்கும் ஒரே அணி.
முக்கிய வீரர்கள் : சேடியோ மனே (ஃபார்வர்ட்), நம்பாலிஸ் மெண்டி (மிட்ஃபீல்டர்), இட்ரிசா குயே (மிட்ஃபீல்டர்), கலிடு கெளலிபாலி (டிஃபெண்டர்), எட்வர்ட் மெண்டி (கோல்கீப்பர்).
குரூப் ´பி´
இங்கிலாந்து (உலகத் தரவரிசை – 5)
கடந்த உலகக் கிண்ணத்தில் அரையிறுதி வரையும், யூரோ கோப்பை கால்பந்தில் இறுதி வரையும் வந்த இங்கிலாந்து, சாம்பியனாகும் முனைப்புடன் இந்த உலகக் கிண்ண போட்டிக்கு வருகிறது. ஐரோப்பிய தகுதிச்சுற்றிலிருந்து தோல்வியே சந்திக்காத அணியாகவும், அதிக கோல்கள் (39) அடித்த அணியாகவும் வந்திருக்கிறது. இதற்கு முன் 15 முறை உலகக் கிண்ண போட்டியில் களம் கண்டிருக்கும் இங்கிலாந்து, அதிகபட்சமாக 1966 இல் சொந்த மண்ணிலேயே சாம்பியன் ஆகியது. அணியின் முன்னேற்றத்தில் பயிற்சியாளர் கெரத் செளத்கேட்டின் பங்கு முக்கியமானது.
முக்கிய வீரர்கள் : ஹாரி கேன் (ஸ்டிரைக்கர்), புகாயோ சகா (ஃபார்வர்ட்), ஜூட் பெல்லிங்காம் (மிட்ஃபீல்டர்), ஃபீல் ஃபோடன் (மிட்ஃபீல்டர்/ஃபார்வர்ட்), டெக்லான் ரைஸ் (மிட்ஃபீல்டர்).
ஈரான் (உலகத் தரவரிசை – 20)
தொடர்ந்து 3 ஆவது முறையாக உலகக் கிண்ண போட்டிக்குத் தகுதிபெற்றிருக்கிறது ஈரான். கார்லோஸ் கெய்ரோஸ் பயிற்சியின் கீழ் தொடர்ந்து 2 ஆவது முறையாக உலகக் கிண்ண போட்டிக்காக பட்டை தீட்டப்பட்டிருக்கிறது. இத்துடன் 5 ஆவது முறையாக உலகக் கிண்ண போட்டிக்கு வந்திருக்கும் ஈரான், எதிலுமே குரூப் சுற்றை கடந்ததில்லை. எனவே, இம்முறை அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதே அதன் இலக்கு. கடந்த எடிஷனில் முன்னாள் உலக சாம்பியன் ரஷ்யா, ரொனால்டோ ஆதிக்கம் செலுத்தும் போர்ச்சுகல் அணிகள் இருந்த பிரிவிலேயே 4 புள்ளிகள் பெற்றது குறிப்பிடத்தக்கது.
முக்கிய வீரர்கள் : சர்தார் அஸ்மெளன் (ஸ்டிரைக்கர்), மெஹதி தரேமி (விங்கர்), கரீம் அன்சாரிஃபர்த் (மிட்ஃபீல் டர்), எஷான் ஹஜ்சஃபி (லெஃப்ட் பேக்/மிட்ஃபீல்டர்), அலிரீஸ் பெய்ரான்வந்த் (கோல்கீப்பர்).
அமெரிக்கா (உலகத் தரவரிசை – 16)
கிரேக் பெர்ஹால்டரால் பயிற்றுவிக்கப்பட்டிருக்கும் அமெரிக்க வீரர்கள் லீக் போட்டிகளில் ஆர்செனல், பார்சிலோனா, போருசியா டார்ட்மண்ட், செல்சி, ஜுவென்டஸ் அணிகளில் முக்கிய இடம் வகிப்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு போட்டியில் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறுவதே அமெரிக்காவின் இலக்கு. இதற்கு முன் 10 முறை உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்றிருக்கும் அமெரிக்கா, அதிகபட்சமாக அறிமுக எடிஷனில் (1930) மூன்றாம் இடம் பிடித்தது. ஒரு முறை காலிறுதி வரை வந்தது. 1990 க்குப் பிறகு தொடர்ந்து 7 முறை உலகக் கிண்ண போட்டிக்குத் தகுதி பெற்றிருக்கிறது.
முக்கிய வீரர்கள் : கிறிஸ்டியன் புலிசிச் (அட்டாக்கிங் மிட்ஃபீல்டர்), செர்ஜினோ டெஸ்ட் (ரைட் பேக்), மெஸ்டன் மெக்கென்னி (மிட்ஃபீல்டர்), யூனுஸ் மூசா (மிட்ஃபீல்டர்), ஜியோவனி ரெய்னா (ஃபார்வர்ட்).
வேல்ஸ் (உலகத் தரவரிசை – 19)
64 ஆண்டுகால தவத்துக்குப் பிறகு மீண்டும் உலகக் கிண்ண போட்டியில் இடம் பிடித்திருக்கிறது இந்த அணி. கடைசியாக 1958 ஆம் ஆண்டு பங்கேற்றபோது, காலிறுதி வரை வந்திருந்தது. இந்த முறை தகுதிச்சுற்றில் பெல்ஜியம், செக் குடியரசு அணிகளிடம் இருந்து புள்ளிகளை பறித்துக் கொண்டு தனக்கான இடத்தை உறுதி செய்திருக்கிறது. அணியின் பயிற்சியாளராக ராபர்ட் பேஜின் பங்களிப்பு அளப்பரியது. அணியின் முன்னாள் வீரரான அவர், 41 முறை தலைவராக செயல்பட்டிருக்கிறார். யூரோ கிண்ண போட்டியில் அணியை சிறப்பாக வழிநடத்தியவர்.
முக்கிய வீரர்கள் : கெரத் பேல் (ஃபார்வர்ட்), டேனியல் ஜேம்ஸ் (விங்கர்), பிரென்னான் ஜான்சன் (ஃபார்வர்ட்), ஆரோன் ராம்சே (மிட்ஃபீல்டர்), நீகோ வில்லியம்ஸ் (விங்பேக்).

Leave a comment