Post

Share this post

கோலியைத் தாண்டிச் செல்வாரா சூர்யகுமார் யாதவ்?

டி20 உலகக் கிண்ண சூப்பர் 12 சுற்றில் 5 இன்னிங்ஸில் 3 அரை சதங்கள் அடித்த இந்தியாவின் சூர்யகுமார் யாதவ், டி20 தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தார். டி20 உலகக் கிண்ண போட்டியில் அவர் 239 ஓட்டங்கள் எடுத்தார். ஸ்டிரைக் ரேட் – 189.68. டி20.
இந்த வருடம் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்களின் பட்டியலும் அவர் தான் முதலிடத்தில் உள்ளார். 29 ஆட்டங்களில் 1040 ஓட்டங்கள். 1 சதம் மற்றும் 9 அரைசதங்கள். ஸ்டிரைக் ரேட் – 185.71.
2022 இல் டி20 கிரிக்கெட்டில் 6 முறை ஆட்ட நாயகன் விருதுகளை வென்றுள்ளார் சூர்யகுமார். கோலியும் 2016 இல் 6 முறை ஆட்ட நாயகன் விருதுகளை வென்றுள்ளார். இதனால் இன்று முதல் தொடங்கும் நியூசிலாந்து டி20 தொடரில் சூர்யகுமார் மேலும் ஒரு விருது வாங்கி கோலியைத் தாண்டிச் செல்வாரா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

Recent Posts

Leave a comment