நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள கனெக்ட் திரைப்படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
மாயா, இறவாக்காலம், கேம் ஓவர் ஆகிய படங்களை இயக்கியவர் அஸ்வின் சரவணன். இவர் நடிகை நயன்தாராவை முன்னணி கதாபாத்திரமாக வைத்து அடுத்து இயக்கி வரும் படம் – கனெக்ட்.
ரெளடி பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் நயன்தாராவுடன், அனுபம் கெர், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இந்நிலையில் நடிகை நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தத் திரைப்படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு பிருத்வி சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.