Post

Share this post

நிஜ கணவர் கூட இப்படி அழமாட்டார்!

பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் சண்டையை தாண்டி காதல் ட்ராக் தான் எப்போதும் அதிகம் முக்கியத்துவம் பெறும்.
ரச்சிதாவிடம் எல்லைமீறும் ராபர்ட்
தற்போது நடந்துவரும் பிக்பாஸ் 6ம் சீசனில் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் மற்றொரு போட்டியாளரான ரச்சிதாவுக்கு எல்லைமீறி லவ் டார்ச்சர் கொடுத்து வருகிறார்.
இந்த வாரம் அதற்கேற்றாற்போல அவர்கள் இருவரையும் ராஜா – ராணி வேஷம் போட வைத்த டாஸ்க்கும் ராபர்டுக்கு உதவியது. இருப்பினும் ரச்சிதா ராபர்டிடம் தொடர்ந்து லிமிட் ஆகவே இருந்து வருகிறார்.
மேலும் ரச்சிதா அசீம் உடன் சேர்ந்து சீக்ரெட் டாஸ்கில் பங்கேற்றதை பார்த்து ராபர்ட் இறுதியில் கதறி கதறி அழுதார்.
அழுத ராபர்ட்.. விளாசும் நெட்டிசன்கள்
ரச்சிதா தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி ராபர்ட் கதறி கதறி அழுதிருக்கிறார். இது ரச்சிதாவுக்கும் தேவையில்லாத பிரச்னையை கொடுத்து இருக்கிறது.
இப்படி ராபர்ட் அளித்திருப்பது cringe என நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுத்து வருகிறார்கள். ரச்சிதாவின் நிஜ கணவர் கூட இப்படி செய்திருக்கமாட்டார், அவ்வளவு cringe ஆக இருக்கிறது என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Leave a comment