Post

Share this post

இந்த வாரம் BB யில் இருந்து வெளியேறும் நபர்?

பிக்பாஸை தாண்டி எந்த ஒரு நிகழ்ச்சியும் இவ்வளவு பிரபலம் அடைந்தது இல்லை. அன்றாடம் வீட்டில் ஒரு விஷயம் நடக்கிறது, சண்டை, காதல், கிசுகிசு, கலாட்டா, சிரிப்பு, வெறுப்பு என மொத்தம் கலந்த கலவையாக பிக்பாஸ் வீடு உள்ளது.
இப்போது அரண்மனை டாஸ்க் பிக்பாஸ் வீட்டில் நடந்து வருகிறது. அதில் ராபர்ட் மற்றும் ரச்சிதா ராஜா ராணியாக இருக்கிறார்கள்.
ராஜா ராணி நடனம் ஆடுவது என செம ஜாலியாக இருக்கிறார்கள்.
இந்த வாரம் எலிமினேஷனுக்கு அசீம், ஜனனி, கதிரவன், தனலட்சுமி, குயின்ஸி, ராபர்ட், ஆயிஷா மற்றும் நிவாஷினி தேர்வானார்கள். இவர்களில் அசீம், ஜனனி முதல் இரண்டு இருக்க ராபர்ட், ஆயிஷா, நிவாஷினி 3 பேரும் இறுதியில் உள்ளார்கள்.
இவர்கள் 3 பேரில் இருந்து யார் வெளியேறப்போகிறார்கள் என்றால் நிவாஷினி என கூறப்படுகிறது.

Leave a comment