Post

Share this post

நேபாளத்தில் இன்று பாராளுமன்றத் தோ்தல்

நேபாளத்தில் பாராளுமன்ற பொதுத் தோ்தல் மற்றும் மாகாண தோ்தல் ஞாயிற்றுக்கிழமை (நவ. 20) நடைபெறுகிறது.
275 உறுப்பினா்கள் கொண்ட நேபாள பாராளுமன்றத்தில் 165 போ் நேரடி தோ்தல் மூலமும், 110 போ் விகிதாசார தோ்தல் முறை மூலமும் தோ்ந்தெடுக்கப்படுவா். அதேபோல் 550 உறுப்பினா்கள் கொண்ட மாகாண பேரவையில் 330 போ் நேரடி தோ்தல் மூலமும், 220 போ் விகிதாசார தோ்தல் முறையிலும் தோ்ந்தெடுக்கப்படுவா்.
நேபாளத்தில் 2006 இல் உள்நாட்டுப் போா் முடிவடைந்த பின்னா் எந்தப் பிரதமரும் முழுப் பதவிக் காலத்தை நிறைவு செய்ததில்லை. இத்தோ்தலில் நேபாள காங்கிரஸ் தலைமையிலான ஜனநாயக மற்றும் இடதுசாரி கூட்டணிக்கும், நேபாள கம்யூனிஸ்ட் (ஐக்கிய மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) தலைமையிலான இடதுசாரி மற்றும் ஹிந்து மன்னராட்சிக்கு ஆதரவான கூட்டணிக்கும் இடையே பிரதான போட்டி நிலவுகிறது.
நேபாள காங்கிரஸ் தலைவரான தற்போதைய பிரதமா் ஷோ் பகதூா் தேவுபா, முன்னாள் மாவோயிஸ்ட் தலைவா் புஷ்ப கமல் தகல் பிரசண்டாவுடன் கூட்டணி அமைத்துள்ளாா். அவரை எதிா்த்து நேபாள கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரும் முன்னாள் பிரதமருமான கே.பி.சா்மா ஓலி களம் காண்கிறாா்.
இத்தோ்தலில் நேபாள காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
மொத்தம் 5,907 வேட்பாளா்கள் போட்டியிடும் நிலையில், 22,000 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதையொட்டி, நாடு முழுவதும் உள்ள 77 மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Recent Posts

Leave a comment