நடிகர் அப்பாஸ் 90 களில் மிகவும் பாப்புலரான நடிகர்களில் ஒருவர். காதல் தேசம் உள்ளிட்ட எக்கச்சக்க படங்களில் நடித்து பெண்களுக்கு அதிகம் பிடித்த நடிகராக அந்த நேரத்தில் வலம் வந்தார் அவர்.
அதற்கு பிறகு அவருக்கு படவாய்ப்புகள் குறைய தொடங்கி தற்போது அவர் முழுமையாக நடிப்பை நிறுத்திவிட்டார்.
மருத்துவமனையில் அப்பாஸ் அட்மிட் ஆகி இருக்கும் போட்டோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. அதை பார்த்து ரசிகர்கள் கடும் அதிர்ச்சி ஆகி இருக்கிறார்கள்.
சில தினங்களுக்கு முன் முட்டியில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட அவர் அதற்காக ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட போது எடுத்த போட்டோவை தான் வெளியிட்டு இருக்கிறார்கள்.