Post

Share this post

த்ரிஷா பகிர்ந்த முத்தக் காட்சி! (விடியோ)

பிரபல நடிகை த்ரிஷா நடிப்பில் 2019-ல் பேட்ட, 2021-ல் பரமபதம் விளையாட்டு ஆகிய படங்கள் வெளியாகின. சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் அவரது கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. அவரது அழகு கூடிக்கொண்டே போனதாக ரசிகர்கள் பாராட்டினர்.
பொன்னியின் செல்வன் 2, சதுரங்க வேட்டை 2, ராம் (மலையாளம்) ஆகிய படங்கள் அடுத்து வெளிவரவுள்ளன. த்ரிஷா நடிக்கும் புதிய படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குநர் அருண் வசீகரன் இயக்கத்தில் உருவாகும் தி ரோட் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் த்ரிஷா.
இந்நிலையில் தனது பேனர் ஒன்றிற்கு குழந்தை ஒன்று முத்தமிடும் விடியோவினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நடிகை த்ரிஷா. தற்போது இந்த விடியோ வைரலாகி வருகிறது.
இந்த விடியோவிற்கு ரசிகர்கள், “இளைய பிராட்டி குந்தவைக்கு யார்தான் முத்தம் கொடுக்க மாட்டார்கள்” என கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Trish (@trishakrishnan)

Recent Posts

Leave a comment