மாரடைப்பு காரணமாக வங்காள நடிகை ஐந்த்ரிலா சர்மா காலமானார்.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் ஐந்த்ரிலா சர்மா(24). இவர் ‘ஜுமுர்’ என்ற தொலைக்காட்சி தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். பின்னர் ‘அமி திதி நம்பர் 1’ உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.
அண்மையில் மூளை பாதிப்பால் பக்கவாதம் ஏற்பட்டு கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் மருத்துவமனையில் மாரடைப்பு ஏற்பட்டு அவர் காலமானார்.
அவரின் மறைவுக்கு ரசிகர்கள், திரை பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஐந்த்ரிலா சர்மா, ஏற்கெனவே 2 முறை புற்றுநோய் பாதிப்பில் இருந்து மீண்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.