Post

Share this post

மகளை சுட்டுக் கொன்று பையில் அடைத்த தந்தை!

உத்தரப் பிரதேசத்தில் 21 வயது பெண்ணை அவரது தந்தை கொன்றதாகச் சந்தேகிக்கப்படும் வழக்கில் பொலிஸாருக்கு தில்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மதுராவில் உள்ள யமுனா எக்ஸ்பிரஸ்வே அருகே உள்ள சர்வீஸ் லேனில் நவம்பர் 18 ஆம் திகதி சிவப்பு நிற டிராலி பைக்குள் ஆயுஷி யாதவ் என்ற இளம்பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
பதர்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மோட்பாண்ட் கிராமத்தில் உள்ள அவர்களது வீட்டில் ஆயுஷிவை சுட்டுக் கொன்றதாக அவரது தந்தை நிதேஷ் யாதவ் ஒப்புக்கொண்டார் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
இது குறித்து காவல் துறையினர் மேலும் தெரிவிக்கையில், ஆயுஷி யாதவ் தனது தந்தையால் கொல்லப்பட்டது, அவரது தாய் மற்றும் சகோதரருக்கு தெரியும் என தெரிவித்தனர்.
இந்நிலையில், நவம்பர் 24 ஆம் திகதிக்குள் குற்றம் சாட்டப்பட்ட நித்தேஷ் யாதவின் விவரங்களுடன் எஃப்ஐஆர் மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கையின் நகல்களை குழு கோரியுள்ளது.

Leave a comment