உலகக் கிண்ண கால்பந்து தொடரின் இன்றைய ஆட்டத்தில் 6 – 2 என்ற கோல் கணக்கில் ஈரான் அணியை வீழ்த்தியது இங்கிலாந்து.
உலகக் கிண்ண கால்பந்து போட்டிகள் நவம்பர் 20 முதல் கட்டாரில் கோலகலமாகத் தொடங்கின.
நவம்பர் 20 நடைபெற்ற முதல் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் கட்டாரை வீழ்த்தி ஈகுவடார் வெற்றி பெற்றது. இந்த நிலையில், இன்றையப் போட்டியில் பலம் வாய்ந்த இங்கிலாந்து அணி ஈரானை எதிர்கொண்டது.
ஆட்டத்தின் ஆரம்பம் முதலே இங்கிலாந்து அணி ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் முதல் பாதியில் இங்கிலாந்து மூன்று கோல்கள் அடித்து முன்னிலை வகித்தது. ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் அந்த அணி மேலும் மூன்று கோல்கள அடித்து அசத்தியது.
ஈரான் அணியால் இரண்டு கோல்களை மட்டுமே அடிக்க முடிந்தது. இதனையடுத்து, ஆட்ட நேர முடிவில் 6 – 2 கோல் கணக்கில் ஈரானை இங்கிலாந்து வீழ்த்தியது.