Post

Share this post

நயன்தாராவுடன் சினிமா பார்க்க வேண்டுமா?

மாயா, இறவாக்காலம், கேம் ஓவர் ஆகிய படங்களை இயக்கியவர் அஸ்வின் சரவணன். இவர் நடிகை நயன்தாராவை முன்னணி கதாபாத்திரமாக வைத்து அடுத்து இயக்கி வரும் படம் – கனெக்ட்.
ரெளடி பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் நயன்தாராவுடன், அனுபம் கெர், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்நிலையில் நடிகை நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தத் திரைப்படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு பிருத்வி சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.
டீசர் தற்போது 2 மில்லியன் (20 லட்சம்) பார்வையாளர்களை கடந்துள்ளது.
இந்தப் படத்தின் டிரைலருக்கு ரியாக்‌ஷன் விடியோவை கன்னெக்ட்டீசர்ரியாக்‌ஷன் (#ConnectTeaserReaction) என்ற ஹேஷ்டேக்கில் வெளியிடுபவர்களில் சிலர் தேர்வு செய்யப்பட்டு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுடன் கனெக்ட் திரைப்படத்தை வெளியாகும் முன்பே பார்க்கலாம் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Recent Posts

Leave a comment