Post

Share this post

சினிமா பிரபலம் விக்னேஷ் தற்கொலை!

மாங்காடு அடுத்த மதனந்தபுரம் பகுதியில் திரைப்பட உதவி ஒளிப்பதிவாளா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
மதனந்தபுரம் பகுதியில் உள்ள தனியாா் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவா் விக்னேஷ் (22). இவா் திரைப்படத் துறையில் உதவி ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வந்தாா். கடந்த ஒரு மாதமாக மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த விக்னேஷ் திங்கள்கிழமை இரவு வீட்டில் தனது அறைக்குள் சென்றவா் வெளியே வரவில்லை.
இதனால் அவரது உறவினா்கள் உள்ளே சென்று பாா்த்த போது விக்னேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிா்ச்சியடைந்து மாங்காடு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனா்.
சம்பவ இடத்திற்கு வந்த மாங்காடு போலீசாா் விக்னேஷ் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில் உதவி ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வந்த விக்னேஷ் கடந்த சில மாதங்களாக காதல் தோல்வியால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தது தெரியவந்துள்ளது.

Leave a comment