2022 உலகக் கிண்ண கால்பந்து போட்டி கத்தாரில் நவம்பர் 20 முதல் டிசம்பர் 18 வரை நடைபெறுகிறது. லீக் சுற்றில் 12 நாள்களுக்குத் தினமும் நான்கு ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் பங்கேற்கும் 32 அணிகள் 8 பிரிவாக பிரிந்து களமிறங்குகின்றன.
லீக் சுற்றில் குரூப் ஜி பிரிவை சேர்ந்த பிரேசில், செர்பியா அணிகள் அதிகாலை மோதின. முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 62 வது நிமிஷம் மற்றும் 73 வது நிமிஷத்தில் அசத்தலாக இரு கோல்களை அடித்தார் ரிச்சர்லிசன்.
பெரிதும் எதிர்பார்த்த நெய்மர் கோலடிக்கவில்லை. 2014 இல் அறிமுக வீரரான் நெய்மர்க்கு பிறகு அறிமுக போட்டியில் ரிச்சர்லிசன் 2 கோல்களை அடித்து அசத்தியுள்ளார்.