ஃபாசில் ஜோசப் நடிப்பில் வெளியான ‘ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’ திரைப்படம் வசூலைக் குவித்து வருகிறது.
விபின் தாஸ் இயக்கத்தில் இயக்குநரும் நடிகருமான ஃபாசில் ஜோசப், தர்ஷனா ராஜேந்திரன் நடிப்பில் உருவான மலையாள திரைப்படம் ‘ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’.
அக்.28 ஆம் தேதி கேரளத்தில் வெளியான இப்படம் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதால் இதுவரை ரூ.40 கோடி வரை வசூலைக் குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
படத்தின் வெற்றியால் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ஓடிடி வெளியீட்டுத் தேதி தள்ளிச்சென்றபடியே இருக்கிறது.