ரஜினி மகளுக்கு மெட்டு போடும் ரஹ்மான்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவிருக்கும் ’லால் சலாம்’ படத்திற்கான அப்டேட் வெளியாகியுள்ளது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிப்பில் லால் சலாம் திரைப்படம் உருவாகி வருகிறது. லைக்கா நிறுவனம் தயாரிப்பில், பிரமாண்ட படைப்பாக உருவாகும் இந்த படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசைமையக்கவுள்ளார்.
அதற்கான பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுடன் படத்திற்கு பாடல்கள் அமைக்கும் பணிகளில், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும், ஏ.ஆர். ரஹ்மானும் ஈடுபட்டுள்ளனர்.