Post

Share this post

QR முறைமை தொடர்பில் புதிய அறிவிப்பு!

அடுத்த மாதத்தில் இருந்து எரிபொருள் விநியோகத்துக்கான QR முறைமை இரத்து செய்யப்படும் என வெளியாகியுள்ள செய்தி பொய்யானது என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போதே இவ்விடயத்தை தெரிவித்துள்ளார்.
“மிகவும் நெருக்கடியான நிலையில் தான் எரிபொருள், எரிவாயு இறக்குமதி செய்யப்படுகிறது. அமைச்சு மட்டத்திலான முறையான முகாமைத்துவத்தினால் தற்போது எரிபொருள் விநியோகம் சீரமைக்கப்பட்டுள்ளது.
எனினும் ஊடகங்கள் தவறான விடயங்களை சமூகமயப்படுத்துகின்றன. QR முறைமை எதிர்வரும் மாதம் முதல் இரத்து செய்யப்படும் என வெளியாகியுள்ள செய்தி அடிப்படையற்றது” எனவும் தெரிவித்துள்ளார்.

Recent Posts

Leave a comment