ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்களின் பெயர்ச்சியும், கிரகங்களின் சேர்க்கையும் அனைத்து 12 ராசிகளையும் பாதிக்கின்றன.
சமீபத்தில், நவம்பர் 13 திகதி அன்று, செவ்வாய் கிரகம் ரிஷப ராசியில் பிரவேசித்தது. சுக்கிரன் கிரகமும் ராசி மாறி விருச்சிக ராசியில் நுழைந்துள்ளது.
இதனால் செவ்வாய் கிரகம், சுக்கிரன் அதிபதியாக உள்ள ரிஷப ராசியிலும், சுக்கிரன், செவ்வாய் அதிபதியாக உள்ள விருச்சிக ராசியிலும் உள்ளனர். செவ்வாய் மற்றும் சுக்கிரனின் இத்தகைய நிலை தன ராஜயோகத்தை உருவாக்குகிறது.
டிசம்பர் 5 ஆம் திகதி தனுசு ராசியில் சுக்கிரன் சஞ்சரிக்கும் வரை இந்த ராஜயோகம் இருக்கும். இந்த யோகத்தின் காரணமாக 3 ராசிக்காரர்கள் பெரும் பண பலன்களைப் பெறுவார்கள்.
தன ராஜயோகத்தால் அபரிமிதமான அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகள் எவை என இந்த பதிவில் காணலாம்.
இந்த ராசிக்காரர்களுக்கு தன ராஜயோகம் அதீத நற்பலன்களை தரும் :
ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு தன ராஜயோகம் பல நன்மைகளைத் தரும். தைரியம், நம்பிக்கை அதிகரிக்கும். மக்கள் உங்கள் மீது எளிதில் ஈர்க்கப்படுவார்கள். விரைவில் திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளது.
கவர்ச்சி, ஊடகம் சம்பந்தப்பட்டவர்கள் ஆதாயம் அடைவார்கள். நீங்கள் செய்யும் அனைத்து செயல்களிலும் வெற்றி உண்டாகும். சில நல்ல செய்திகள் கிடைக்கும்.
கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு இந்த ராஜயோகம் பல நன்மைகளைத் தரும். இந்த நேரம் தொழிலுக்கு நல்லது. பணம், பதவி, மரியாதை கிடைக்கும். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். திருமணம் ஆகாதவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம். வியாபாரம் வளரும். தடைபட்ட வேலைகள் முடிவடையும்.
தனுசு: தன ராஜ யோகம் உருவாகி வருவதால் தனுசு ராசிக்காரர்கள் மிகுந்த நற்பலன்களை பெறுவார்கள். தனுசு ராசிக்காரர்களுக்கு செவ்வாய், சுக்கிரன் இரு கிரகங்களுமே நல்ல பலன்களைத் தரும்.
வாழ்வில் சுகபோகங்கள் அதிகரிக்கும். முன்னேற்றம் கிடைக்கும். தடைபட்ட வேலைகள் முடிவடையும். புதிய வேலை தேடுபவர்களுக்கு லாபம் கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு இப்போது திருமணம் நிச்சயம் ஆகும்.