Post

Share this post

பிக்பாஸை இந்த வாரம் தொகுத்து வழங்கப்போவது யார்?

தமிழில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்குவதால் மட்டுமே அந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்கென்றே பல ரசிகர்கள் காத்து கிடக்கின்றார்கள்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்த 5 சீசன்கள் தொகுத்து வழங்கிய இவர் தற்போது 6வது சீசனையும் தொகுத்து வழங்கி வருகின்றார்.
இவ்வாறு இருக்கையில் காய்ச்சலால் சில தினங்களுக்கு முன் கமல் ஹாசன் அவர்கள் ராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஓரிரு நாட்களில் குணமடைந்து வீடு திரும்புவார் என்று மருத்துவமனையில் அறிக்கை வெளியிட்டது. அத்தோடு ஓய்வு எடுக்கவும் இருக்கிறார் என்று சொல்லப்பட்டது.
இப்படியிருக்கும் போது இந்த வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார் என்று கேள்விகள் எழுந்தும் சிம்பு அல்லது ரம்யா கிருஷ்ணன் வரலாம் என்றும் சொல்லப்பட்டது.
ஆனால் இன்று கமல் ஹாசன் மருத்துவமனையில் இருந்து டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டுள்ளராம். டிஸ்ஜார்ஜ் ஆன அடுத்த சில மணிநேரத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகவுள்ள டிஎஸ்பி படத்தின் டிரைலர் வெளியீடு நிகழ்ச்சிக்கு கமல் ஹாசன் சென்றுள்ளார்.
அப்படியென்றால் நாளை நடைபெறும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தொகுத்து வழங்குவார் என ரசிகர்கள் உறுதியாக கூறுகிறார்கள்.

Leave a comment