Post

Share this post

அவுஸ்திரேலியாவிற்கு கிடைத்த வாய்ப்பு!

குரூப் டி பிரிவில் துனிசியாவை 1 – 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதின் மூலம் நாக் அவுட் சுற்று வாய்ப்பை தக்க வைத்துள்ளது அவுஸ்திரேலியா.

முதல் ஆட்டத்தில் உலக செம்பியன் பிரான்ஸிடம் 1 – 4 என தோல்வியைத் தழுவியது ஆஸி. துனிசியாவோ பலமான டென்மாா்க் அணியுடன் டிரா கண்டிருந்தது. பிஃபா தரவரிசையில் துனிசியா 30, ஆஸி. 38 ஆவது இடங்களில் உள்ளன.

இந்நிலையில் இரு அணிகள் மோதிய ஆட்டம் அல் ஜனௌப் மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. முதல் பாதி ஆட்டத்தில் ஆஸி. அணி வீரா்களே முழு ஆதிக்கம் செலுத்தி ஆடினா். 23-ஆவது நிமிஷத்தில் குட்வின் கடத்தி அனுப்பிய பாஸை, தலையால் முட்டி அற்புதமாக கோலாக்கினாா் மிச்சல் டியுக். பின்னா் பதிலுக்கு கோலடிக்க துனிசியா தரப்பு மேற்கொண்ட முயற்சிகளை ஆஸி. கோல் கீப்பா் மேட்டி ராயன் முறியடித்தாா்.
துனிசிய வீரா் ஜபால் அடித்த பாஸின் மூலம் எளிதாக கோலடிக்கும் வாய்ப்பை தவற விட்டாா் எம்சாக்னி. கோல் போஸ்ட்டை விட்டு தொலைவில் சென்று விட்டது பந்து.
முதல் பாதி முடிவில் 1 – 0 என ஆஸி. முன்னிலை வகித்தது.
இரண்டாம் பாதியில் துனிசியா ஆதிக்கம் செலுத்தியது. ஆனால் அதன் கோல் போடும் முயற்சிகள் பலன் தரவில்லை. 72 ஆவது நிமிஷத்தில் ஆஸி. வீரா் மெக்லாரன் அனுப்பிய பந்தை தவற விட்டாா் லெக்கி. இதனால் இரண்டாவது கோல் போடும் வாய்ப்பு நழுவியது.
இறுதியில் 1 – 0 என வென்றது ஆஸி. அடுத்த ஆட்டத்தில் டென்மாா்க்கை வீழ்த்தினால் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறும்.
அதே வேளை, நடப்புச் சாம்பியன் பிரான்ஸுடன் கடினமா ஆட்டத்தை ஆட வேண்டும் துனிசியா.

Leave a comment