Post

Share this post

வடிவேலு குரலில் வெளியான 2 ஆவது பாடல்! (வீடியோ)

‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தின் 2ஆவது பாடல் நேற்று மாலை 6 மணிக்கு வெளியானது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு வடிவேலு நாயகனாக நடிக்கும் படம் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’. இந்த படத்தில் வடிவேலுவுடன் இணைந்து நடிகை ஷிவாணி நாராயணன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லைக்கா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை சுராஜ் இயக்கியுள்ளார்.
படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். படம் டிசம்பர் 9ஆம் தேதி வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இந்த படத்திலிருந்து ப்ர்ஸ்ட் சிங்கிள் பாடல் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. விவேக் எழுதிய ‘அப்பத்தா’ எனத் தொடங்கும் அந்தப் பாடலை வடிவேலு பாடியிருந்தார்.
இந்த நிலையில் படத்தின் 2ஆவது பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்திருந்தது. அதன்படி படத்தின் 2ஆவது பாடல் இன்று வெளியாகியுள்ளது. பணக்காரன் எனத் தொடங்கும் அந்தப் பாடலை வடிவேலுவுடன் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும் இணைந்து பாடியுள்ளார்.
அதேபோல் இப்பாடலையும் பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார்.

Leave a comment