புல்லட் ஓட்டி அசத்திய அரசியல் பிரபலம்! (விடியோ)

மத்தியப் பிரதேசத்தில் ராகுல் காந்தி தனது நடைப்பயணத்தின்போது புல்லட் பைக்கை ஓட்டி அசத்தினார்.
தமிழகத்தின் கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பா் 7 ஆம் திகதி தொடங்கிய ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம், கேரளம், கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களின் வழியாக மத்திய பிரதேசத்தை புதன்கிழமை எட்டியது. அந்த மாநிலத்தின் காந்த்வா மாவட்டம், பாா்கான் பகுதியில் இருந்து தனது இரண்டாவது நாள் நடைப்பயணத்தை ராகுல் வியாழக்கிழமை காலை தொடங்கினாா். அப்போது, பிரியங்கா, அவரது கணவா் ராபா்ட் வதேரா, மகன் ரைஹன் வதேரா ஆகியோா் பங்கேற்றனா்.
தனது சகோதரா் ராகுலின் இந்த நடைப்பயணத்தில் பிரியங்கா முதல்முறையாக பங்கேற்றார். அவா்கள் சோ்ந்து நடந்து சென்றபோது, இருவரையும் வாழ்த்தி கட்சித் தொண்டா்கள் கோஷமிட்டனா். இவா்களுடன் ராஜஸ்தான் முன்னாள் துணை முதல்வா் சச்சின் பைலட்டும் நடைப்பயணத்தில் பங்கேற்றாா். இந்த நிலையில் ராகுல் காந்தி மத்தியப் பிரதேச மாநிலத்தில் தனது 5 ஆவது நாள் நடைப்பயணத்தை மோவ் நகரில் இன்று காலை தொடர்ந்தார். அவருடன் உள்ளூர் மக்களும், காங்கிரஸ் தொண்டர்களும் நடைப்பயணத்தில் பங்கேற்றனர்.
இந்தூரை நோக்கி நடைப்பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி சிறிது தூரம் என்பீல்ட் புல்லட் பைக்கை ஓட்டினார். இதனைக் கண்ட காங்கிரஸ் தொண்டர்கள் அவருக்கு உற்சாகம் அளித்தனர். முன்னதாக ராகுல் காந்தி இந்த நடைப்பயணத்தில் ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் ஒன்றையும் அழைத்துச் சென்றார். சிறிது தூரம் அந்த நாய் ராகுலுடன் பயணித்தது. 81 ஆவது நாளாக நீடித்து வரும் ராகுலின் நடைப்பயணம், மத்திய பிரதேசத்தில் இருந்து ராஜஸ்தானில் டிசம்பா் 4 இல் நுழையவுள்ளது.
Rahul Gandhi rides motorbike (bullet) during #BharatJodoYatra on way to Indore pic.twitter.com/ygN0PKeiOf
— Thoothukudi Congress Sevadal (@SevadalTUT) November 27, 2022