Post

Share this post

ஆயுர்வேத சிகிச்சையில் நடிகை சமந்தா?

சமந்தாவுக்கு தற்போது ஆயுர்வேத சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மயோசிடிஸ் என்கிற நோயால் (தசை அழற்சி) பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சமந்தா அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சைப் பெற்று வரும்போதே யசோதா படத்துக்கான பின்னணி குரல் கொடுக்கும் பணியில் கையில் ட்ரிப்ஸ் உடன் ஈடுபட்டார்.
ஒருசில நேர்காணல்களில் பங்கேற்று பேசிய சமந்தா, ரசிகர்களின் அன்பினாலும், வேண்டுதல்களாலும் மட்டுமே கடினமாக காலத்தைக் கடந்து வந்ததாக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். எனினும் நேர்காணல்களில் வழக்கமான அவரின் துடிப்பு குறைவாகவே இருந்தது.
அடுத்தடுத்து உடல் நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதால், அவரின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது என்றே கூறலாம்.
தற்போது, வீட்டில் ஓய்வு எடுத்துவரும் சமந்தாவுக்கு ஆயுர்வேத சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், இதனால் அவரின் உடல்நிலை முன்னேறி வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் சமந்தாவுக்கு ஆயுர்வேத சிகிச்சை முறையால் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரித்து உள்ளதாக கூறப்படுகிறது.

Leave a comment