கடந்த 2005 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியான சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸை வைத்து பி.வாசு இயக்குகிறார்.
லைகா புரடக்ஷன் தயாரிப்பில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகும் இப்படத்திற்கு எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். கலை – தோட்டா தரணி. மேலும், நகைச்சுவை நடிகர் வடிவேலு முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
சந்திரமுகி-1 திரைப்படம் 200 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டு பெரும் வெற்றி பெற்றதோடு மிக அதிகமான வசூலையும் குவித்தது குறிப்பிடத்தக்கது.
தமிழில் தாம்தூம் படத்தில் நடித்தவர் கங்கனா. தற்போது சந்திரமுகி கதாபாத்திரத்தில் பிரபல ஹிந்தி நடிகை கங்கனா ரணாவத் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலால் சமூக வலைதளத்தில் சந்திரமுகி ஹேஸ்டேக் டிரெண்டிங்கில் உள்ளது.