கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்திற்கு நேற்று (02) மாலை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
1989 முதல் 2002 வரை சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராகவும், 1989 முதல் 2004 வரை மத்திய இராணுவ ஆணைக்குழுவின் தலைவராகவும் இருந்த H.E. ஜியாங் ஜெமின் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்திற்குச் சென்றுள்ளார்.
அதேவேளை அனுதாப குறிப்பிலும் கையொப்பமிட்டமை குறிப்பிடத்தக்கது.