Post

Share this post

வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களிற்கு அதிரடி தடை!

400 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் உரிமையாளர்களின் உரிமம் தடை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சுற்றுலா வீசாவில் ஆட்களை வெளிநாடுகளுக்கு அனுப்பிய நிறுவனங்களின் உரிமங்களே இவ்வாறு தடை விதிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
அதேசமயம் டொலர்கள் இன்றி உண்டியல் வடிவில் பணத்தை கொண்டு வந்த பல வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களும் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றில் இடம்பெற்ற தொழில்துறை அமைச்சின் வரவு – செலவுத் திட்டம் மீதான வரவு செலவுத் திட்ட குழு விவாதத்தின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

Leave a comment