மதுமிதா இயக்கிய கேடி என்கிற கருப்புதுரை திரைப்படம் 2019ஆம் ஆண்டு நவம்பரில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது. 71வயது முதியவருக்கும் 8வயது சிறுவனுக்கும் நடக்கும் உறவு குறித்த திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றது. பல்வேறு திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிகர் அபிஷேக் பச்சன் நடிக்க உள்ளார். இந்தப் படத்தினை ஹிந்திக்கு ஏற்றவாரு மாற்றியமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மதுமிதாவே இந்தப் படத்தினையும் ஹிந்தியில் இயக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
வயதான கதாபாத்திரத்தில் அபிஷேக் நடிக்க உள்ளார். போபாலில் 2023 ஜனவரியில் இதன் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. மொத்தம் 60 நாள்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பார்த்திபனின் ஒத்த செருப்பு படத்தினையும் ஹிந்தியில் ரீமேக் செய்து அபிஷேக் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.