Post

Share this post

ஜனாதிபதி ரணிலை புகழ்ந்த பேசிய மஹிந்த!

தன்னை போன்ற நல்லவர்கள் சூழ்ந்து இருப்பதால், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் தற்போது நல்லவராக மாறியிருப்பதாக கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அமைச்சர் அமரவீர இதனை தெரிவித்தார்.
தன்னை போன்ற கமத்தொழிலாளர்களை கொண்ட பிரதேசங்களை பிரதிநிதித்துப்படுத்துவோரின் யோசனைகளை ஆராய்ந்து பார்ப்பதன் காரணமாக, ஜனாதிபதி நெற் பயிர் செய்கை உட்பட கமத்தொழில் துறைக்கு கூடிய ஒத்துழைப்பை வழங்கி வருகிறார் எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் தம்மை போன்றவர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அருகில் இருக்கவில்லை என்றால், கடந்த காலத்தில் போன்று நாட்டின் நெற் பயிர் செய்கையை கவனத்தில் கொள்ளாது, வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்யும் நிலைமையேற்பட்டிருக்கும் எனவும் மகிந்த அமரவீர மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment