நடிகர் பரத் மற்றும் வாணி போஜன் நடிப்பில் உருவான மிரள் படம் சமீபத்தில் வெளியானது. தற்போது மீண்டும் இந்த கூட்டணி இணைந்துள்ளது. இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமான பரத் தற்போது 50 வது படமாக ‘லவ்’ படத்தில் நடித்துள்ளார்.
மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பினைப் பெற்ற லவ் படத்தின் தமிழ் ரீமிக்கை தயாரித்து இயக்கியுள்ளார் ஆர்.பி.பாலா. இந்தப் படத்திற்கு இசை- ரோனி ரஃபேல். ஒளிப்பதிவு- பி.ஜி. முத்தையா.