2022ஆம் ஆண்டுக்கான உலகின் செல்வாக்குமிக்க நூறு பெண்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
இந்த பட்டியலில் இலங்கையின் மனித உரிமை ஆர்வலர் சந்தியா எக்னெலிகொடவும் இடம்பெற்றுள்ளார்.
உலகின் செல்வாக்கு மிக்க பெண்கள் பட்டியலில் நடிகை பிரியங்கா சோப்ரா, விண்வெளி பொறியாளர் Sirisha Bandla உள்ளிட்ட 4 இந்திய பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.
சந்தியாவின் கணவரான பிரகீத் எக்னெலிகொட, இலங்கை அரசை கடுமையாக விமர்சித்த ஒரு பத்திரிகையாளர் ஆவார்.
இவர் 2010 ஆம் ஆண்டு திடீரென காணாமல் ஆக்கப்பட்டார். தன் கணவருக்காக நீதி கோரி போராடி வரும் சந்தியா, தன் கணவரை போலவே காணாமல் ஆக்கப்பட்ட மற்றவர்கள் சார்பிலும் குரல் கொடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.