OOSAI RADIO

நாங்கள்


Warning: Trying to access array offset on value of type bool in /home/u673745035/domains/oosai.lk/public_html/wp-content/themes/audioatro/vc_templates/audioatro_about_us_intro.php on line 14

எமது ஓசை வானொலி இணையதளத்துக்கு வருகை தந்த உங்களை அன்போடு வரவேற்கிறோம்!

யார் நாங்கள்? நாங்கள் என்ன செய்கிறோம்? எங்களால் மற்றவர்களுக்கு என்ன பயன்? இந்த கேள்விகளுக்கு விடை தருவதே எமது பிரதான கடமை.

19.08.2020 அன்று ஆரம்பித்த எமது பயணத்தில் நாம் நாடளாவிய ரீதியில் இருந்து 30 அறிவிப்பாளர்களை மட்டுமே தேர்ந்தெடுத்தோம். இருப்பினும் பயிற்சி பட்டறை ஆரம்பிக்கப்பட்ட 2 மாதங்களில் கொரோனா 2 ஆம் அலையால் கல்வி நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

பின் ZOOM தொழில்நுட்பத்தின் ஊடாக மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட கல்வி பயணம் இனிதே 15.08.2021 அன்று முதலாம் பிரிவு மாணவர்களின் விருதுகள் மற்றும் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கையோடு நிறைவு காண இருந்த தருணத்தில் மீண்டும் கொரோனாவால் இலங்கை முடங்கியது.

அதனை தொடர்ந்து 26.09.2021 இரண்டாம் பிரிவு மாணவர்களின் பயிற்சிப்பட்டறை ZOOM தொழில்நுட்பத்தின் ஊடாக ஆரம்பமானது. 6 மாதங்களின் பின் அவர்களுடைய கற்றல் நடவடிக்கைகள் நிறைவு காண, தவிர்க்க முடியாத காரணத்தால் 27.03.2022 நடைபெற இருந்த விருதுகள் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு பிற்போடப்பட்டது.

இதனை தொடர்ந்து மே மாதத்தின் பின் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் குழப்ப நிலையால் அடுத்த 3 மாதங்கள் நம் அனைவரினதும் வாழ்க்கையே கேள்விக்குறியானது.

இறுதியில் 04.09.2022 அன்று எல்லோருக்கும் பொதுவான இறைவன் அருளால் 1 ஆம் மற்றும் 2 ஆம் பிரிவு மாணவர்களின் விருதுகள் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு சிறப்பாக அரங்கேறியது.

முதல் 2 பிரிவுகளிலும் கல்வி கற்ற மாணவர்கள் இப்போது எமது ஓசை வானொலியில் பணியாற்றி வருவதுடன் அவர்களின் நிகழ்ச்சிகளுக்கு ஏற்றாற் போல் வருமானத்தையும் தற்போது பெற்று வருகின்றனர். அவர்களை போல நீங்களும் நம்மிடம் கல்வி கற்று வருமானம் பெற விரும்பினால், AMA (ஆதி மீடியா அக்கடமி) க்கு உங்களுடைய பெயர், தொலைபேசி எண், வட்சப் இலக்கம் என்பனவற்றை தெரியப்படுத்தவும்.

நாம் உங்களை விரைவாக தொடர்பு கொள்ளுவோம்.

எம்மை தொடர்பு கொள்ள – 0772447010 & 0760352168

நன்றி – வணக்கம் – நற்பவி!


Type and hit enter