இலங்கையில் கார்களின் விலை அதிகரிப்பு!
இலங்கையில் பயன்படுத்தப்படும் வாகனங்களின் விலை சடுதியாக அதிகரித்து வருவதாக வாகன இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன்படி, பயன்படுத்திய வாகனங்களின் விலை 18 வீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கை வாகன வர்த்தக சங்கத்தின் தலைவர் சரக பெரேரா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கார் உதிரி பாகங்களின் விலையும் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.