OOSAI RADIO

Post

Share this post

டின் மீன் இறக்குமதி இலங்கையில் நிறுத்தம்

நேற்று (11) முதல் வெளிநாடுகளில் இருந்து டின் மீன் இறக்குமதியை நிறுத்துமாறு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழில் திணைக்கள பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்தவிடம் பணிப்புரை விடுத்துள்ளார்.

உள்நாட்டு டின் மீன் கைத்தொழிலை ஊக்குவிக்கும் வகையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் டின்மீன் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து வட் வரி அதிகரிப்பைத் தொடர்ந்து தாம் எதிர்கொள்ளும் நடைமுறை சவால்கள் தொடர்பில் கலந்துரையாடினர்.

உள்ளூரில் தயாரிக்கப்படும் டின் மீன்களுக்கு விலை அதிகரிப்பு செய்வது மற்றும் டின்மீன் இறக்குமதிகளால் தீர்மானிக்கப்படும் சந்தை விலை போன்ற விடயங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

அதேவேளை கடந்த சில மாதங்களாக வெளிநாடுகளில் இருந்து சுமார் 8000 டன் டின் மீன்கள் இறக்குமதி செய்யப்படுவதால் உள்ளூர் டின் மீன்களை உள்ளூர் சந்தையில் விற்பனை செய்ய முடியாமல் போனது முக்கிய பிரச்சனையாக சுட்டிக்காட்டப்பட்டது.

இதனையடுத்தே டின் மீன் இறக்குமதியை நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a comment

Type and hit enter