உலகின் மதிப்புமிக்க நாணயங்களின் பட்டியல் இதோ!
ஐக்கிய நாடுகள் சபை உலகின் 180 நாணயங்களை உத்தியோகபூர்வமாக அங்கீகரித்துள்ள நிலையில் பெறுமதிமிக்க 10 நாணயங்களின் பாட்டியல் வெளியாகி உள்ளது.
ஒரு நாட்டின் நாணய மதிப்பு என்பது அந்த நாட்டின் பொருளாதார பலத்தை பிரதிபலிக்கின்றது.
அந்தந்த நாடுகளின் ஏற்றுமதி, இறக்குமதி, அந்நிய செலாவணி கையிருப்பு, தங்க கையிருப்பு மற்றும் நாளாந்த வர்த்தகம் ஆகியவற்றின் அடிப்படையில் நாணயத்தின் மதிப்பு கணிப்பிடப்படுகின்றது.
இந்நிலையில் குவைத் தினார், பஹ்ரைன் தினார், ஓமானி ரியால், ஜோர்டானிய தினார், ஜிப்ரால்டர் பவுண்ட், பிரிட்டிஷ் பவுண்ட், கேமன் தீவு பவுண்ட், சுவிஸ் பிராங்க், யூரோ, அமெரிக்க டொலர் ஆகிய நாணயங்கள் உலகில் மதிப்புமிக்க 10 நாணயங்கள் என பேர்ப்ஸ் வெளியிட்டுள்ளது.