சர்வதேச ரோமிங் பிளான்கள் அறிமுகம்!
முன்னணி டெலிகாம் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்காக புதிய சர்வதேச அன்லிமிட்டட் ரோமிங் பேக்ஸ்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஜியோ யூஸர்களின் பயண அனுபவங்களை சிறப்பானதாக்கும் நடவடிக்கையாக, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது சமீபத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் அமெரிக்காவிற்கு ஏற்றவாறு புதிய சர்வதேச ரோமிங் பிளான்ஸ்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இத்துடன் ஒரு விரிவான வருடாந்திர பிளானும், இன்-ஃப்ளைட் டேட்டா பேக்ஸ்களும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
UAE-க்கான சர்வதேச ரோமிங் பேக்ஸ்கள்:
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது UAE இன்டர்நேஷனல் ரோமிங் பேக்ஸ்களின் கீழ் ரூ.2,998, ரூ.1598 மற்றும் ரூ.898 என்ற விலைகளில் 3 புதிய பிளான்ஸ்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதில் ரூ.2,998 திட்டத்தின் கீழ், சப்ஸ்கிரைபர்ஸ்களுக்கு 250 அவுட்கோயிங் மினிட்ஸ் மற்றும் 250 இன்கமிங் மினிட்ஸ் கிடைக்கும்.
மேலும் 21 நாட்கள் வேலிடிட்டியுடன் வரும் இந்த பிளான் 7GB டேட்டாவை வழங்குகிறது. இந்த பிளானில் 100 எஸ்எம்எஸ்-களும் அடங்கும்.
மறுபுறம் ரூ.1598 என்ற விலையில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் பிளானானது 3GB டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் உடன் 150 அவுட்கோயிங் மினிட்ஸ் மற்றும் இன்கமிங் மினிட்ஸ்களை கொண்டுள்ளது.
இந்த பிளான் மொத்தம் 14 நாட்களுக்கான வேலிடிட்டியை கொண்டுள்ளது.
இதற்கிடையில் 7 நாள் வேலிடிட்டி கொண்டதாக இருக்கும் ரூ.898 பிளான் 1GB டேட்டா, 100 அவுட்கோயிங் மற்றும் இன்கமிங் மினிட்ஸ் மற்றும் 100 எஸ்எம்எஸ்-களை வழங்குகிறது.
அமெரிக்காவிற்கான சர்வதேச ரோமிங் பேக்ஸ் :
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அறிவித்ததை போலவே அமெரிக்காவிற்கு செல்லும் ஜியோ வாடிக்கையாளர்களுக்காக 3 புதிய சர்வதேச ரோமிங் பேக்ஸ்களை நிறுவனம் அறிவித்துள்ளது.
ஜியோ நிறுவனம் ரூ.3455, ரூ.2555 மற்றும் ரூ.1555 என்ற விலைகளில் புதிய பிளான்களை வெளியிட்டுள்ளது. இந்த பிளான்கள் அனைத்துமே கால்ஸ் மற்றும் டேட்டா நன்மைகளை வழங்குகின்றன.
இதில் ரூ.3455 பிளான் யூசர்களுக்கு 250 மினிட்ஸ் மற்றும் 25GB டேட்டாவை வழங்குகிறது. இந்த பிளான் 30 நாட்கள் வேலிடிட்டி மற்றும் 100 எஸ்எம்எஸ்-களை வழங்குகிறது.
அதே நேரம் ரூ.2555 பிளானின் ஒரு பகுதியாக, ரிலையன்ஸ் ஜியோ யூசர்கள் 100 எஸ்எம்எஸ், 250 நிமிடங்கள் மற்றும் 15GB டேட்டாவைப் பெறுவார்கள். இந்த பிளான் 21 நாட்களுக்கு வேலிடிட்டியை கொண்டுள்ளது.
மறுபுறம் ரூ.1555 பிளானானது 7GB டேட்டா, 150 மினிட்ஸ் மற்றும் 100 எஸ்எம்எஸ்-களை வழங்குகிறது. மேலும் இது 10 நாட்கள் வேலிடிட்டி பீரியட்டை கொண்டிருக்கிறது.
வருடாந்திர ரோமிங் பேக்கேஜ்:
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புதிய சர்வதேச ரோமிங் பேக்ஸ்களுடன் புதிய வருடாந்திர பேக் ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது,
இதன் விலை ரூ.2,799 ஆகும். இந்த பிளான் 51 நாடுகளில் பொருந்தும் மற்றும் இது 2 ஜிபி டேட்டா மற்றும் 365 நாட்கள் செல்லுபடியாகும்.
இந்த வருடாந்திர பிளான் 51 நாடுகளுக்கு பொருந்தும் மற்றும் இது 2GB டேட்டா மற்றும் 365 நாட்கள் வேலிடிட்டியை கொண்டிருக்கிறது.
இன்-ஃப்ளைட் டேட்டா பேக்ஸ்:
ஜியோ நிறுவனம் ரூ.195, ரூ.295 மற்றும் ரூ.595 ஆகிய மூன்று புதிய இன்-ஃப்ளைட் பிளான்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த மூன்று பிளான்களிலும் யுஸர்கள் 100 வாய்ஸ் மினிட்ஸ் மற்றும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது.
மேலும் இந்த அனைத்து பிளான்களும் 1 நாள் வேலிடிட்டி கொண்டது.
இதில் ரூ.195 பிளான் 250MB டேட்டாவையும், ரூ.295 மற்றும் ரூ.595 பிளான்கள் முறையே 500MB மற்றும் 1GB டேட்டாவையும் வழங்குகிறது.
பல்வேறு நாடுகளுக்கான இன்-ஃப்ளைட் வாய்ஸ் மற்றும் டேட்டா பேக்ஸ்:
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 22 ஏர்லைன்ஸ் மற்றும் 51 நாடுகளுக்கு பொருந்தும் 4 இன்-ஃப்ளைட் பிளான்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதில் ரூ.2,499, ரூ.4,999, ரூ.3999 மற்றும் ரூ.5,999 ஆகிய விலையிலான பிளான்கள் அடங்கும்.
35 நாடுகளை உள்ளடக்கிய ரூ.2,499 பிளானின் கீழ், யூஸர்கள் 100 அவுட்கோயிங் மினிட்ஸ், 250MB டேட்டா மற்றும் 10 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.4,999 இன்-ஃப்ளைட் பிளான் 1500 நிமிடங்கள், 5GB டேட்டா மற்றும் 1500 எஸ்எம்எஸ்-களை வழங்குகிறது.
இந்த பிளான் 30 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. ரூ.3,999 பிளானானது 30 நாட்கள் வேலிடிட்டி, 4GB டேட்டாவுடன் மற்றும் 100 எஸ்எம்எஸ்-களை வழங்குகிறது.
கடைசியாக ரூ.5,999 பிளானானது 400 காலிங் மினிட்ஸ், 6GB டேட்டா மற்றும் 500 எஸ்எம்எஸ்-களை 30 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது. ரூ.4,999, ரூ.3,999 மற்றும் ரூ.5,999 பிளான்ஸ்கள் 51 நாடுகளை உள்ளடக்கியது.