OOSAI RADIO

Post

Share this post

நாய் பாய்ந்ததால் பறிபோன உயிர்!

யாழ்ப்பாணம் நாவற்குழி செம்மணி வீதியுடாக முச்சக்கர வண்டியில் குடும்பத்துடன் பயணித்த நபர் ஒருவர் நாய் குறுக்கே பாய்ந்ததில் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மனைவி மற்றும் இரண்டு வயது ஆண் குழந்தை காயமடைந்துள்ளனர்.

இச் சம்பவம் நேற்று முன் தினம் (18) நாவற்குழி செம்மணி வீதியில் இடம்பெற்றுள்ளது .

படுகாயமடைந்த குறித்த இளம் குடும்பத்தர் யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் உயிரிழந்தார்.

சம்பவத்தில் சாவகச்சேரி நாவற்குழி பகுதியைச் சேர்ந்த வேலுப்பிள்ளை அமல்ராஜ் வயது 35 என்ற இரண்டு வயது பிள்ளையின் தந்தை உயிரிழந்தவர் ஆவார்.

இந்நிலையில் இளம் குடும்பஸ்தர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a comment

Type and hit enter