பயணிகள் விமானம் விபத்து
ஆப்கானிஸ்தானின் வடக்கு படக்ஷான் மாகாணத்தில் இந்திய பயணிகள் விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த விபத்தனை படக்ஷானில் உள்ள தலிபான்களின் தகவல் மற்றும் கலாச்சாரத் தலைவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
எனினும் இந்த விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை எனவும், விபத்துக்குள்ளான விமானத்தில் எத்தனை பேர் பயணம் செய்தனர், மற்றும் உயிர் சேதம் தொடர்பில் எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை என அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் விபத்து குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளிவராத நிலையில், அந்நாட்டு ஊடகங்களின் முதல் கட்ட தகவலின்படி, மாஸ்கோவுக்குச் சென்ற இந்திய பயணிகள் விமானம் படக்ஷானின் வாகான் மலை பகுதியில் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் சிக்கிய அந்த விமானத்தில் அதிகமான இந்திய பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது.
மேலும், இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், குரான்-வா-முன்ஜான் மாவட்டத்தின் டோப்கானா பகுதிக்கு ஒரு குழு அனுப்பப்பட்டுள்ளதாக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.