பிக்பாஸிற்கு பிறகு ரீ-என்றி கொடுத்த விசித்திரா! (Video)
பிக்பாஸிற்கு பிறகு பைனல் மேடையை அலங்கரித்த விசித்திராவின் நடனம் ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.
தமிழ் சினிமாவில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமாகியவர் தான் விசித்திரா.
திறமைக்கேற்ப சரியான வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் பாடல்களுக்கு நடனம் ஆடி வந்தார்.
திருமணத்திற்கு பின்னர் ஏற்பட்ட சில பிரச்சினைகள் காரணமாக சினிமாவை விட்டு விலகி குடும்ப வாழ்க்கைக்குள் சென்று விட்டார்.
பல வருடங்களுக்கு பின்னர் குக் வித் கோமாளியில் முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக மீண்டும் மீடியாவிற்குள் ரீ-என்றி கொடுத்தார்.
இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 7 ல் வாய்ப்பு கிடைக்க, கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி விட்டார்.
பிக்பாஸை விட்டு வெளியேறிய பின்னர் பிக்பாஸ் பைனல் மேடையில் குழு நடனம் ஆடி அசத்தியுள்ளார்.
இதன்போது எடுக்கப்பட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
காட்சியை பார்த்த விசித்திரா ரசிகர்கள், “90 சினிமாவை ஞாபகப்படுத்தி விட்டார்” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.