OOSAI RADIO

Post

Share this post

உலக அளவில் உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு!

உலக அளவில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வடையும் என சர்வதேச பொருளியல் வல்லுநர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

செங்கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள போர் சூழ்நிலையால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சரக்குக் கப்பல்கள் மாற்றுவழியை பயன்படுத்துவதால் பொருட்செலவுகள் மும்மடங்காகவும் போக்குவரத்துச் செலவுகள் இரண்டு மடங்காகவும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹூதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களை தவிர்ப்பதற்காக நீண்ட ஆப்பிரிக்காவைச் சுற்றிய நீழ் வழிப்பாதை வழியாக கோப்பி முதல் பழங்கள் வரை கப்பல்களில் அனுப்பி வைக்கப்படுகிறது.

எரிவாயு, எண்ணெய் போன்றவற்றுக்கு இந்த நீண்ட பயணத்தினால் பாதிப்பில்லை. ஆனால் பழங்கள் மற்றும் ஏனைய பொருள்கள் கெட்டுவிட வாய்ப்புள்ளது.

சில சரக்குகள் தாமதமடைவதுடன் சூயஸ் கால்வாயில் இருந்து திருப்பி விடப்படுகின்றன.

செங்கடல் மீதான தாக்குதல் இதுவரை குறைவாக இருந்தாலும் உணவு விநியோகச் சங்கிலி எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதை நினைவூட்டுகிறது. மேலும் நிலைமை மோசமடைந்தால் அத்தியாவசிய பொருள்களின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

செங்கடல் வழியாக ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்யும் இந்தியாவின் முக்கிய திராட்சை ஏற்றுமதி நிறுவனமான ‘யூரோ ஃபுருட்ஸ்’ இயக்குநர் நிதின் அகர்வால் அனைவரும் செங்கடல் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இந்நிலையில் போர் காரணமாக கப்பல்கள் நீண்ட நீர்வழிப் பாதையை பயன்படுத்துவதால் சரக்குச் செலவுகள் மும்மடங்காகவும் போக்குவரத்துச்செலவுகள் இரண்டு மடங்காகவும் அதிகரித்துள்ளன.

Leave a comment

Type and hit enter