தேர்தல் தொடர்பில் நடிகர் விஜய் ஆலோசனை!
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக உள்ள நடிகர் விஜய் அரசியலில் ஈடுபட போவதாக பரபரப்பாக பேசப்பட்டு வந்தாலும் நடிகர் விஜய் அதனை உறுதிப்படுத்தவில்லை.
எனினும் அவரது பொதுசேவைகள் நடிகர் விஜய் அரசியலுக்குள் வரவுள்ளதாகவே தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் இந்த வருடம் இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நடிகர் விஜய்தேர்தல் குறித்து மக்கள் இயக்க மாவட்ட தலைவர்களுடன் நேற்று (25) திடீர் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
கலந்துரையாடலில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களில் இருந்து மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடலாமா அல்லது வேறு கட்சிகளுக்கு ஆதரவு கொடுக்கலாமா என ஆலோசிக்கப்பட்டதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.